அருள்வாக்கு

இறைவார்த்தையை பகிர்ந்து வாழ்ந்திட

6.7.09

Arulvakku Mobile site


Friends,
 
The Liturgical readings and the feastdays are available online through your WAP / GPRS enabled mobile phones.
Log on to
and find your mass readings.
Inform your friends too, to visit our website 
 
 

--
அடைக்கல ராசா ச.ச.

அருள்வாக்கு.காம்
www.arulvakku.com



30.6.09

LIFEBOOK - Great "rules" to live by.....


 


         
 LIFEBOOK

Health:


1.    Drink plenty of water
2.    Eat breakfast like a king, lunch like a prince and dinner
like a beggar
3.    Eat more foods that grow on trees and plants, and eat
less  food that is manufactured in plants
4.    Live with the 3 E's -- Energy,  Enthusiasm, and Empathy
5.    Make time
for prayer
6.    Play more games
7.    Read more books than you did in 2008
8.    Sit in silence for at least 10 minutes each day
9.    Sleep for 7 hours
10.  Take a 10-30 minutes walk every day ---- and while you walk,
 smile


Personality:


11.  Don't compare your life to others'. You have no idea what
 their journey is all about.
12.  Don't have negative thoughts or things you cannot control.
 Instead invest your energy in the positive present moment.
13.  Don't over do ; keep your limits
14.  Don't take yourself so seriously ; no one else does
15.  Don't waste your precious energy on gossip
16.  Dream more while you are awake
17.  Envy is a waste of time.  You already have all you need.
18.  Forget issues of the past. Don't remind your partner with
 his/her mistakes of the past. That will ruin your present happiness.
19.  Life is too short to waste time hating anyone. Don't hate
 others.
20.  Make peace with your past so it won't spoil the present
21.  No one is in charge of your happiness except you
22.  Realize that life is a school and you are here to learn.
 Problems are simply part of the curriculum that appear and fade away like algebra class but the lessons you learn will last a lifetime.
23.  Smile and laugh more
24.  You don't have to win every argument. Agree to
disagree.

Community:


25.  Call your family often
26.  Each day give something good to others
27.  Forgive everyone for everything
28.  Spend time with people over the age of 70 &
under the  age of 6
29.  Try to make at least three people smile each day
30.  What other people think of you is none of your business
31.  Your job won't take care of you when you are sick. Your
family and friends will. Stay in touch.

Life:


32.  Do the right things
33.  Get rid of anything that isn't useful, beautiful or joyful
34.  GOD heals everything
35.  However good or bad a situation is, it will change
36.  No matter how you feel, get up, dress up and show up
37.  The best is yet to come
38.  When you awake alive in the morning, thank GOD for it
39.  Your Inner most is always happy. So, be happy.

Last but not the least :
40.  Do forward this to everyone you care about
.
 

 

 


 

 

 

 

    Have  a happy week!!!!

 

 



 


 

6.5.09

Arulvakku Software

Dear Friends,
 
After so many months of wait and search, finally we are launching into making of the new software for Tamil Bible - Arulvakku. Some programmers in Chennai have started the project and it will be a standard software for our personal use.
 
We do not intend to sell the software as the Word of God cannot be sold out. Hence we invite some generous souls among you to support us financialy to complete this project. A minimum price would be levied when we start to distribute the CDs. We are also planning to redesign and update the Arulvakku website
 
It has been estimated that this software development would cost Rs.75,000 and another Rs. 25,000 for the dublication ( minimum 1000 copies) and printing of the labels and handouts. Rs. 25,000 would be needed to update and to maintain the Arulvakku website.
 
All the donations to Arulvakku would be acknowledged in the Arulvakku group forum and you can be sure of the prayers of hundreds of our group members.
 

Rev. Fr. J. Adaikalaraja SDB
Mary Help of Christians Church,
Madhakottai, Thanjavur.
South India  - 613005.
 
Telephone:   +91,4362,227253
Handphone:  +91,94430 81005

30.10.06

நவம்பர் 26 ஞாயிறு
கிறிஸ்து அரசர் பெருவிழா

முதல் வாசகம் : தானியேல் 7 : 13-14
13 இரவில் நான் கண்ட காட்சியாவது வானத்தின் மேகங்களின் மீது மானிட மகனைப் போன்ற ஒருவர் தோன்றினார். இதோ! தொன்மை வாய்ந்தவர் அருகில் அவர் வந்தார். அவர் திருமுன் கொண்டு வரப்பட்டார். 14 ஆட்சியுரிமையும் மாட்சியும் அரசும் அவருக்கு கொடுக்கப்பட்டன. எல்லா இனத்தாரும் நாட்டினரும் மொழியினரும் அவரை வழிபட வேண்டும். அவரது ஆட்சியுரிமை என்றுமுளதாகும்; அதற்கு முடிவே இராது. அவரது அரசு அழிந்து போகாது.

தியானப்பாடல் : திபா 93 : 1, 1-2, 5 ஆண்டவர் ஆட்சி செய்கின்றார். அவர் மாட்சியை ஆடையாய் அணிந்துள்ளார்.

இரண்டாம் வாசகம் : திருவெளிப்பாடு 1 : 5-8
5 கிறிஸ்துவே நம்பிக்கைக்குரிய சாட்சி. இறந்தோருள் முதலில் உயிர்பெற்று எழுந்தவர். மண்ணுலக அரசர்களுக்குத் தலைவர். இவர் நம்மீது அன்புகூர்ந்தார். தமது சாவு வாயிலாக நம் பாவங்களிலிருந்து நம்மை விடுவித்தார். 6 ஆட்சி உரிமை பெற்றவர்களாக, அதாவது நம் கடவுளும் தந்தையுமானவருக்கு ஊழியம் புரியும் குருக்களாக நம்மை ஏற்படுத்தினார். இவருக்கே மாட்சியும் ஆற்றலும் என்றென்றும் உரியன. ஆமென். 7 இதோ! அவர் மேகங்கள் சூழ வருகின்றார். அனைவரும் அவரைக் காண்பர். அவரை ஊடுருவக் குத்தியோரும் காண்பர். அவர்பொருட்டு மண்ணுலகின் குலத்தார் அனைவரும் மாரடித்துப் புலம்புவர். இது உண்மை, ஆமென்! 8 ‘அகரமும் னகரமும் நானே’ என்கிறார் கடவுளாகிய ஆண்டவர். இருந்தவரும் இருக்கின்றவரும் வரவிருக்கின்றவரும் எல்லாம் வல்லவரும் அவரே.

நற்செய்தி : யோவான் 18 : 33-37
33 பிலாத்து மீண்டும் ஆளுநர் மாளிகைக்குள் சென்று இயேசுவைக் கூப்பிட்டு, அவரிடம், ‘நீ யூதரின் அரசனா?’ என்று கேட்டான். 34 இயேசு மறுமொழியாக, ‘நீராக இதைக் கேட்கிறீரா? அல்லது மற்றவர்கள் என்னைப்பற்றி உம்மிடம் சொன்னதை வைத்துக் கேட்கிறீரா?’ என்று கேட்டார். 35 அதற்கு பிலாத்து, ‘நான் ஒரு யூதனா, என்ன? உன் இனத்தவரும் தலைமைக் குருக்களும் தானே உன்னை என்னிடம் ஒப்புவித்தார்கள். நீ என்ன செய்தாய்?’ என்று கேட்டான். 36 இயேசு மறுமொழியாக, ‘எனது ஆட்சி இவ்வுலக ஆட்சி போன்றது அல்ல. அது இவ்வுலக ஆட்சி போன்றதாய் இருந்திருந்தால் நான் யூதர்களிடம் காட்டிக் கொடுக்கப்படாதவாறு என் காவலர்கள் போராடியிருப்பார்கள். ஆனால் என் ஆட்சி இவ்வுலக ஆட்சி போன்றது அல்ல’ என்றார். 37 பிலாத்து அவரிடம், ‘அப்படியானால் நீ அரசன்தானோ?’ என்று கேட்டான். அதற்கு இயேசு, ‘அரசன் என்று நீர் சொல்கிறீர். உண்மையை எடுத்துரைப்பதே என் பணி. இதற்காகவே நான் பிறந்தேன்; இதற்காகவே உலகிற்கு வந்தேன். உண்மையைச் சார்ந்தவர் அனைவரும் என் குரலுக்குச் செவிசாய்க்கின்றனர்’ என்றார்.

சிந்தனைக்கு : உண்மைக்குச் சான்று பகர்வதே எனது பணி. இதற்காகவே உலகிற்கு வந்தேன். உண்மையைச் சார்ந்தவரும் எவரும் என் குரலுக்குச் செவிமடுக்கின்றார்கள் என்று இயேசு நற்செய்தியில் பகர்வதன் மூலமாக, இறையாட்சிக்கு தக்கதொரு வரையறை வழங்குகின்றார். உண்மை சிந்திக்கப்பட்டு, சொல்லப்பட்டு, செய்யப்படுகின்ற தருணங்கள்தோறும், இறையாட்சி தழைக்கிறது. உண்மையையும் நேர்மையையும், நன்மையையும் தன்னகத்தே சிறப்புறக் கொண்டிருந்த காரணத்தால் மட்டுமே, இயேசு அரசராக இன்றைய விழாவில் வீர வணக்கம் செலுத்தப்படுகின்றார். சத்தியத்திற்கு எக்கட்டத்திலும் சாட்சி தரவேண்டிய சவால் இறையாட்சியின் குடிமக்களாகிய நமக்கும் உண்டு. எதற்காக வாழவேண்டும் என்று தெளிவுபெற்றவுடன் எப்படி வாழ வேண்டும் என்பதும் அறியப்படும். ~ உமது அரசு வருக (லூக்கா 11:1-4)) என்று இயேசுவின் செபத்தை சொல்லும் ஒவ்வொரு முறையும் இச்சவாலை நமதாக்கிக் கொள்கின்றோம்.

நவம்பர் 19 ஞாயிறு
பொதுக்காலம் - முப்பத்திமூன்றாம் ஞாயிறு


முதல் வாசகம் : தானியேல் 12 : 1-3
1 அக்காலத்தில் உன் இனத்தார்க்குத் தலைமைக் காவலரான மிக்கேல் எழும்புவார். மக்களினம் தோன்றியது முதல் அக்காலம் வரை இருந்திராத துன்ப காலம் வரும். அக்காலத்தில் உன் இனத்தார் விடுவிக்கப்படுவர். நூலில் யார் யார் பெயர் எழுதப்பட்டுள்ளதோ, அவர்கள் அனைவரும் மீட்கப்படுவார்கள். 2 இறந்துபோய் மண்புழுதியில் உறங்குகிற அனைவருள் பலர் விழித்தெழுவர். அவருள் சிலர் முடிவில்லா வாழ்வு பெறுவர்; வேறு சிலரோ வெட்கத்திற்கும் முடிவில்லா இழிவுக்கும் உள்ளாவர். 3 ஞானிகள் வானத்தின் பேரொலியைப் போலவும், பலரை நல்வழிக்குக் கொணர்ந்தவர் விண்மீன்களைப் போலவும், என்றென்றும் முடிவில்லாக் காலத்திற்கும் ஒளிவீசித் திகழ்வர்.

தியானப்பாடல் : திபா 16 : 5, 8, 9-10, 11 இறைவா என்னைப் காத்தருளும்: உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்.

இரண்டாம் வாசகம் : எபிரேயர் 10 : 11-14, 18
11 ஒவ்வொரு குருவும் நாள்தோறும் இறை ஊழியம் புரியும்போது மீண்டும் மீண்டும் அதே பலிகளைச் செலுத்தி வருகிறார். அவையோ பாவங்களை ஒருபோதும் போக்க இயலாதவை. 12 ஆனால், இவர் ஒரே பலியைப் பாவங்களுக்காக என்றென்றைக்கும் எனச் செலுத்திவிட்டு, கடவுளின் வலப்பக்கத்தில் அமர்ந்துள்ளார். 13 அங்கே தம் பகைவர் தமக்குக் கால்மணை ஆக்கப்படும்வரை காத்திருக்கிறார். 14 தாம் தூயவராக்கியவர்களை ஒரே பலியினால் என்றென்றைக்கும் நிறைவுள்ளவராக்கினார். 18 எனவே பாவமன்னிப்பு கிடைத்தபின் பாவத்திற்குக் கழுவாயாகச் செலுத்தும் பலிக்கு இடமேயில்லை.

நற்செய்தி : மாற்கு 13 : 24-32
24 இயேசு தம் சீடர்களிடம், அந்நாள்களில் அவ்வேதனைகளுக்குப் பிறகு கதிரவன் இருண்டுவிடும்; நிலா ஒளிகொடாது. 25 விண்மீன்கள் வானத்திலிருந்து விழுந்த வண்ணமிருக்கும்; வான்வெளிக் கோள்கள் அதிரும். 26 அப்போது மிகுந்த வல்லமையோடும் மாட்சியோடும் மானிடமகன் மேகங்கள் மீது வருவதைக் காண்பார்கள். 27 பின்பு அவர் வானதூதரை அனுப்பி, அவர்கள் மண்ணுலகில் ஒரு கோடியிலிருந்து விண்ணுலகில் மறுகோடிவரை நான்கு திசைகளிலிருந்தும் தேர்ந்துகொள்ளப்பட்டவர்களைக் கூட்டிச் சேர்ப்பார். 28 அத்தி மரத்திலிருந்து ஓர் உண்மையைக் கற்றுக் கொள்ளுங்கள். அதன் கிளைகள் தளிர்த்து இலைகள் தோன்றும்போது கோடைக்காலம் நெருங்கி வந்துவிட்டது என நீங்கள் அறிந்துகொள்கிறீர்கள். 29 அவ்வாறே இவை நிகழ்வதைக் காணும்போது மானிடமகன் கதவை நெருங்கி வந்துவிட்டார் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். 30 இவையனைத்தும் நிகழும்வரை இத்தலைமுறை ஒழிந்து போகாது என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். 31 விண்ணும் மண்ணும் ஒழிந்துபோகும்; ஆனால் என் வார்த்தைகள் ஒழியவேமாட்டா. 32 ஆனால் அந்த நாளையும் வேளையையும் பற்றித் தந்தைக்குத் தவிர வேறு எவருக்கும் தெரியாது; விண்ணகத்திலுள்ள தூதருக்கோ மகனுக்கோ கூடத் தெரியாது.

சிந்தனைக்கு : காலத்தின் அருங்குறிகளை அறிந்து அவைகளுக்கேற்ற முறையிலே தொடர்ந்து நமது வாழ்வையும் வரலாற்றையும், சீர் செய்ய வேண்டும் என்று இரண்டாம் வத்திக்கான் சங்கம் (இன்றைய உலகில் திருச்சபை என்னும் கொள்கைத் திரட்டு, எண் 1, 4, 7) அழைக்கிறது. அத்தி மரத்துக் கிளைகள் மென்மையாகி தளிர் விடுகின்ற சமயத்தில் கோடைக்காலம் அருகிலே இருக்கிறதென்று அறிந்துகொள்வதைப் போல, விரியும் வரலாற்று கட்டங்களை கணிப்புடன் அணுகி ஆவன செய்ய வேண்டுமென்று நற்செய்தியில் இயேசு தருகின்ற அழைப்பும் அதுவே. அந்த நோயாளிக்கு ஒரு புதிய வேகம் கிடைத்தது. மற்றவர்கள் நினைத்தார்கள், நோயாளி பிழைத்துக் கொள்வார் என! ஆனால் மருத்துவரின் கணிப்பு வித்தியாசமாக இருந்தது. அதாவது, இறப்பின் நுழைவாயிலில் இருக்கின்ற காரணத்தால், நோயாளிக்கு இது இறுதி தருணங்கள். தமது திறமைகளையெல்லாம் ஒன்று திரட்டி நோயாளி ஒரு புதிய வேகத்தை வெளிப்படுத்துகின்றார் என்று! அப்படியே நடந்தது. நோயாளியும் இறந்தார். இப்படித்தான், வரலாற்றின் கட்டங்களும் ஏற்றங்களையும், இறக்கங்களையும் சந்திக்கின்றன. பல்வேறு அருட்குறிகளையும், சவால்களையும் எடுத்தியம்புகின்றன. அவ்வாறாக, நமது அனுபவங்களை வார்த்தெடுக்கின்ற சமயத்தில் நாம் ஞானிகளாகின்றோம் என்கிறது இன்றைய முதல் வாசகம். நாம் எப்படிப்பட்டவர்கள்?